Recent Post
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

உலகின் வெகு சுத்தமான கிராமம்

உலகின் வெகு சுத்தமான கிராமம்

சுற்றுலாத் தலங்கள் 

மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிரபுஞ்சி, தலைநகர் ஷில்லாங் தவிர ஜெயின்டியா மலைகள், மேற்கு மற்றும் கிழக்கு கரோ ஹில்ஸ் ஆகிய இடங்களும் எண்ணற்ற பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகின்றன.

சிரபுஞ்சி 

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

ஷில்லாங் \

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

ஈஸ்ட் காசி 

ஹில்ஸ் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் 7 மாவட்டங்களில் ஒன்றாகும். பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த மாவட்டத்தில் நிரம்பியுள்ளதால் இது மேகாலயா மாநிலத்தில் அதிகம் விஜயம் செய்யப்படும் சுற்றுலாப்பிரதேசமாக விளங்குகிறது.

நோஹஸ்நித்தியாங் அருவி 

செவன் சிஸ்டர்ஸ் அருவி என்று பிரபலமான அறியப்படும் நோஹஸ்நித்தியாங் அருவி, ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மௌஸ்மாய் கிராமத்துக்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஜெயின்டியா மலைகள் 

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை.

கிரேம் லியாத் 

ப்ராஹ் ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கி.மீ நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

மௌசின்ரம் ஈஸ்ட் 

காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மௌசின்ரம் கிராமம்தான் உலகிலேயே அதிகமாக மழை பெய்யக்கூடிய இடமாகும்.

நோகலிகை நீர்வீழ்ச்சி 

சிரபுஞ்சியில் அமைந்துள்ள நோகலிகை நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அருவி டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். எனவே மழைக்காலங்களில் இந்த அருவிக்கு சுற்றுலா வருவதே சிறப்பானதாகும்.

லைத்மவ்சியாங் 

மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லைத்மவ்சியாங் மலைப்பிரதேசம்.

கடுகு தோட்டம் 

தலைநகர் ஷில்லாங்கில் உள்ள கடுகு தோட்டம்.

பாராபனி ஏரி 

ஷில்லாங்கிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பாராபனி ஏரி. உமியம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு இந்த ஏரி. இதன் காரணமாக உமியம் ஏரி என்றும் இது அழைக்கப்படுகிறது.

அசைவச்செடி! 

கார்னிவோரஸ் எனப்படும் புலாலுண்ணும் செடி வகை. இந்தச் செடிவகைகள் மேகாலயாவின் காடுகளில் நிரம்ப காணப்படுகின்றன.

மவ்ளினோங் 

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்ளினோங் கிராமம். உலகின் வெகு சுத்தமான கிராமமாக இது அறியப்படுகிறது.

Read more ...

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?!

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?!
உலகின் மிகச் சிறந்த இளம் இயற்பியல், வானியல் நிபுணர்களில் ஒருவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் நடந்து வரும் ஹிக்ஸ் போஸான் என்ற அணுவின் நுண் துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!, 'கடவுள்' இருப்பது உண்மை தான்!! ஈடுபட்டுள்ள முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். பிபிசியுடன் இணைந்து இவர் உருவாக்கிய வானியல் தொடர்பான டாகுமெண்டரிகள் உலகப் புகழ் பெற்றவை. மிகக் கடினமான விண்வெளி ஆராய்ச்சிகளை மிக மிக எளிதாக மக்களுக்குப் புரிய வைப்பதில் கில்லாடி.

வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள்...

இவரது Wonders of Life, Wonders of the Universe, Wonders of the Solar System போன்ற டாகுமெண்டரிகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல்கள் ஒளிபரப்புவது வழக்கம். முடிந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் இந்த சிடிக்களை ஆன்லைனில் வாங்கியாவது பாருங்கள். இவை வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள் என்பதே நிஜம்.
பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்...

பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்... 

 இந்த பிரையன் காக்ஸ் இப்போது ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் சொல்வது இது தான். பூமியையும் மனித குலத்தையும் எந்த நேரத்திலும் மொத்தமாக காலி செய்யப் போவது ஒரு விண் கல் தான் என்கிறார். சமீபத்தில் பூமியை ஒரு பெரிய விண் கல் மிகச் சமீபத்தில் கடந்து சென்றுள்ளது. இந்தக் கல் பூமியின் மீது மோதியிருந்தால் இப்போது இதை எழுத நானோ, படிக்க நீங்களோ இருந்திருக்க சாத்தியமில்லை. பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்.

மனித குலம் செய்த மாபெரும் தவறு... 

 இதே போன்ற விண் கல் எந்த நேரத்திலும் பூமியைத் தாக்கலாம் என்று கூறும் காக்ஸ், இந்த ஆபத்துகளை எதிர்கொள்வது, தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மிக மந்தமான வேகத்தில் நடந்து வருவது ஆச்சரியம் தருவதாகவும், இந்த ஆபத்தை உலக நாடுகள் சரியான உணரவில்லை என்றும் எச்சரித்துள்ளார். இதைப் பற்றி கவலைப்படாவிட்டால் மனித குலம் செய்த மாபெரும் தவறாக அது விளங்கும் என்கிறார்.

பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால்... 

அவர் கூறுகையில், சில மாதங்களுக்கு முன் ஒரு விண்கல் பூமிக்கு மிக அருகே வந்துவிட்டுப் போனது. அது வந்ததே நமக்குத் தெரியாது. அது திரும்பிச் சென்றபோது தான் அதை நாம் கவனித்தோம். அந்தக் கல் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்திருந்தால் பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். நாம் மீண்டும் தப்பியிருக்கிறோம்.

பக்கத்தில் வந்து போன 2014 EC விண்கல்... 

ஒரு பெரிய பேருந்தின் சைஸில் உள்ள 2014 EC என்ற விண்கல் கடந்த மார்ச் மாதம் பூமிக்கு 61,637 கி.மீ. தூரமாக, பூமிக்கு மிகப் பக்கமாக வந்து சென்றது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் 6ல் ஒரு பகுதி தான். இந்தக் கல் பாதை மாறி இன்னும் நெருங்கி வந்திருந்தால் பூமி இந்நேரம் பஸ்பமாகியிருக்கும். மனித இனத்தின் பெயரை தாங்கிக் கொண்டு நிச்சயம் ஒரு விண் கல் விண்ணில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. அது எப்போது பூமியைத் தாக்கும் என்பது நமக்குத் தெரியாது.

நமக்கு குருட்டு அதிர்ஷ்டம்... 

பூமிக்கு மிக ஆபத்தானவை என்று கிட்டத்தட்ட 1,400 விண் கற்களை நாஸா அடையாளம் கண்டு, அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், இன்னும் எத்தனை கற்களோ.. யாருக்குத் தெரியும். இது வரை நாம் தப்பிப் பிழைத்திருப்பது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகத்தான். எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, நம்மிடம் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்தே இந்த ஆபத்துகளை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும் என்று தெரிந்திருந்தும் இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

ரஷ்யாவில் விழுந்த மாபெரும் விண்கல்.... 

 விண் கற்களை அணு ஆயுதங்களைக் கொண்டு தகர்க்கலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சாத்தியமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடங்கக் கூட இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் ஒரு மாபெரும் விண்கல் வந்து விழுந்து வெடித்தது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப் போல 20, 30 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம்.... 

அந்தக் கல் பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது கூட நமக்குத் தெரியாது. அது பூமிக்குள் வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம். ஆனால், நிலைமையே புரியாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகின்றன என்கிறார் காக்ஸ்.

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?: 

இதற்கிடையே நாஸா மிகக் கவலையுடன் கண்காணித்து வரும் விண் கல் 1950 DA தான். கிட்டத்தட்ட 1 கி.மீ. விட்டம் கொண்ட இந்த விண்கல் 1950ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்ல் ஏ. விர்டனென் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. 17 நாட்கள் மட்டுமே அப்போது இதை கண்காணிக்க முடிந்தது. பின்னர் இது மறைந்துபோனது. ஆனால், 2000ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இது விண்வெளி தொலைநோக்கிகளுக்குப் புலப்பட்டது.

இதுவரை இது உடையவில்லை.... 

 2001ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இந்தக் கல் பூமிக்கு 7,789,950 கி.மீ. அருகே வந்துவிட்டுப் போனது. அப்போது இதை ஆராய்ந்தபோது இந்தக் கல் மிக வேகமாக சுழல்வதும், இரும்பு, நிக்கல் போன்ற ரசாயனங்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது. இந்த அதிவேகமாக சுழற்சி காரணமாக இந்தக் கல் தானாகவே உடைந்து சிதறியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை இது உடையவில்லை.

பயண திசை மாறுகிறது?... 

வினாடிக்கு 15 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் இந்த எரிகல் பூமியில் 2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அட்லாண்டிக் கடலுக்குள் மணிக்கு 60,000 கி.மீ. வேகத்தில் வந்து விழ வாய்ப்புண்டு. இது நடந்தால் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு பூமி வெறும் திட சாம்பலாகவே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அடுத்தடுத்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் பூமியை நோக்கிய இந்தக் கல்லின் பயண திசை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை உறுதி செய்கின்றன. இது தான் இப்போதைக்கு நமக்கு உள்ள ஒரே ஆறுதல்!
Read more ...

மனநலம் பாதிக்கப்பட்ட மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் தற்கொலை செய்திருப்பார்: நிபுணர் தகவல்

மனநலம் பாதிக்கப்பட்ட மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் தற்கொலை செய்திருப்பார்: நிபுணர் தகவல்
மாயமான மலேசிய விமானத்தின் விமானி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாதல் அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று விமான விபத்து விசாரணை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. ஆனால் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடி வரும் போதிலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.

கேப்டன் 

விமானம் மாயமானபோது விமானி ஜாஹரி அகமது ஷா தான் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

தற்கொலை 

விமான விபத்து விசாரணை நிபுணரான நியூசிலாந்தை சேர்ந்த இவான் வில்சன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஜாஹரி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்றார்.

இங்கிலாந்து குட்நைட் மலேசியன் 370: 

தி ட்ரூத் பிஹைன்ட் தி லாஸ் ஆப் ஃபிளைட் 370 என்ற புத்தகத்தை எழுதிய இவான் வில்சன் அதை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டார். இந்நிலையில் அவர் இங்கிலாந்து வந்து விமான போக்குவரத்து நிபுணர்களை சந்தித்து விமானிகளின் மனநலம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

வில்சன் 

கடந்த 30 ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளில் 5ல் விமானி கொலை அல்லது தற்கொலை செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மலேசிய விமானத்தின் விமானி தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று விமானியும், நிபுணருமான வில்சன் தெரிவித்தார். வில்சன் தான் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை துவங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. Show Thumbnail
Read more ...

பனிமூட்டம்.. கண் மண் தெரியாமல் மோதிக் கொண்ட 150 வாகனங்கள் – 2 பேர் பரிதாப பலி!

பனிமூட்டம்.. கண் மண் தெரியாமல் மோதிக் கொண்ட 150 வாகனங்கள் – 2 பேர் பரிதாப பலி!
ஆம்ஸ்டர்டாமில் கடும் பனிமூட்டம் காரணமாக 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பரபரப்பாக இயங்கும் டச்சு நெடுஞ்சாலையில்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

26 பேர் படுகாயம்: 

 இந்த விபத்தில் கிட்டதட்ட 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காலையிலேயே விபத்து: 

காலை 8 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தானது, ஏ58 நெடுஞ்சாலையில் தெற்கு நகரங்களான கோய்ஸ் மற்றும் மிடில்பர்க்குக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்டுள்ளது.

2 பேர் பரிதாப பலி: 

 "இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளனர்" என்று ஜீலேண்டின் காவல்துறை அதிகாரியான எஸ்தர் பூட் தெரிவித்துள்ளார்.

நொறுங்கிய 150 வாகனங்கள்: 

கடும் பனிப்பொழிவினால், சாலையின் இரண்டு புறமும் ஏற்பட்ட இந்த விபத்தானது, கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட வாகனங்களை நொறுக்கித்தள்ளியுள்ளது.

50 ஆம்புலன்ஸ்கள்: 

சம்பவம் நடந்த ஹெயின்கென்ஸாண்ட் கோய்ஸில் இருந்து, 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிட்டதட்ட 50 ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை: 

மிகவும் கடுமையாக காயமடைந்தவர்கள் ரோட்டர்டேமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிவேக வாகனங்கள்: 

ஆனாலும், இன்னும் அப்பகுதியில் அதிவேகத்தில்தான் மக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர் என்று மேலும் அதிகாரிகள் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.

Read more ...

ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி சாத்தியமா?யோசனை கேட்கிறது பிரதமர் அலுவலகம்

ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி சாத்தியமா?
ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
தைத் தொடர்ந்தே இப்படி ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி ஓடும் ரயில்கள் மூலமான காற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது. ஆனால் இப்படியான காற்றாலைகள் மூலம் மிகக் குறைந்த அளவுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தமே 25 நிமிடங்கள்தான் காற்றாலைகள் இயங்க முடியும். இதனால் இது கூடுதல் செலவு ஏற்படுத்தும் திட்டம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Read more ...

கணவன் (அ) மனைவியோடு செல்லவேண்டிய 15 ஹனிமூன் ஸ்தலங்கள்

கணவன் (அ) மனைவியோடு செல்லவேண்டிய 15 ஹனிமூன் ஸ்தலங்கள்
இந்தியத் திரைப்படங்களில் அடிக்கடி டூயட் பாட வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பல வெளிநாடுகளிலிருந்தும் நம் நாட்டிற்கு ஹனிமூன் கொண்டாட வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். 
இன்றைய காலகட்டத்தில் கல்யாணம் நடப்பதென்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படி திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன் செல்வதோ, கணவன் அல்லது மனைவியோடு எங்காவது தனிமையில் செல்ல நினைப்பவர்களுக்கு இந்தியாவிலேயே ஏராளமான இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே உங்கள் காதலரை கூட்டிக்கொண்டு காதல் வானில் பறக்க தயாராகுங்கள்.

ஸ்ரீநகர் 

ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீநகர் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இங்கு மிகவும் பிரசித்திபெற்ற தால் ஏரியில் உள்ள ஷிக்கரா எனும் படகு வீடுகள் காதல் விளையாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

குல்மார்க் 

குல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குல்மார்க் என்றால், மலர் மைதானம் என்று பொருள். நீங்கள் சாதாரணமாக மலர்ப்படுக்கை தானே பார்த்திருப்பீர்கள். இங்கு வாருங்கள் உங்கள் காதல் துணையோடு டூயட் பாட ஒரு மலர் மைதானமே இங்கு காத்திருக்கிறது.

லடாக்

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள். எல்லா வகையிலும் உங்கள் காதலரோடு சிறப்பான நேரத்தை செலவிட லடாக் வெகு பொருத்தமான இடம்.

மணாலி 

சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மணாலி மலைவாசஸ்தலம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி' என்று அழைக்கப்படுகிறது. குலு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் குலுவை போலவும், சிம்லா போலவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலமாக திகழ்கிறது.

தர்மஷாலா 

இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். அதோடு மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது தர்மஷாலா. இப்படி ஒரு சூழ்நிலையில் உங்கள் காதல் துணையோடு இருக்கின்ற தருணத்தை கொஞ்சம் சித்தித்து பாருங்களேன்!!!

ஆலி 

ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 5 கிலோமீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13500 அடி உயரத்தில் உங்கள் காதலரோடு செல்லும் திரில்லிங் பயணத்தை உங்களால் மறக்கவே முடியாது.

நைனித்தால் 

'இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. நைனித்தால் நகரைச் சுற்றிக் காணப்படும் சிகரங்களை குதிரைச் சவாரி செய்து அடைவதும், இந்நகரின் கவின் கொஞ்சும் ஏரிகளில் படகுச் சவாரி செய்வதும் அற்புதமான அனுபவங்களாகும். இவ்விரண்டு பயணங்களுக்கும் உங்கள் காதல் துணையோடு சென்று வாருங்கள், அந்த சந்தோஷ அனுபவத்தை அளவிட முடியாது.

ஜெய்சல்மேர் 

மலைகள், அருவிகள், கடல் என்று திரும்ப திரும்ப சுற்றிப்பார்த்து அலுத்துவிட்டதா?..அப்ப உங்கள் காதலரை அழைத்துக்கொண்டு பாலைவனத்தில் ஒட்டகச் சவாரி செய்து பாருங்களேன்! தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும், அதே சமயம் அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.

உதய்பூர் 

உதய்பூரில் உள்ள ராஜரீக அரண்மனைகளும், ஆடம்பர ஹோட்டல்களும் உங்களை மகாராஜாவாகவும் அல்லது மகாராணியாகவும் உணரச் செய்யும். இங்குள்ள லேக் பேலஸ் பகுதிக்கு உங்கள் காதலரை அழைத்துக்கொண்டு ஒரு முறை சென்று வாருங்கள்.

மஹாபலேஷ்வர் 

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.

கூர்க்

இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

மூணார் 

கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

ஊட்டி 

மலைகளின் ராணியாக திகழும் ஊட்டியை பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. நீலகிரி மலைப்பாதையில் மலைரயிலில் உங்கள் காதலரோடு இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே ஊட்டிக்கு செல்லும் அனுபவமே போதும்! அதன் பிறகு ஊட்டியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன், தொட்டபெட்டா சிகரம், ஊட்டி ஏரி, குதிரைச் சவாரி என்று அற்புதமான ஹனிமூன் அனுபவத்தை ஊட்டி உங்களுக்கு தர காத்திருக்கிறது.

கொடைக்கானல் 

தமிழ்நாட்டில் எங்கு காதலர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால் அது கொடைக்கானலாகத்தான் இருக்கும்.
டார்ஜீலிங் இயற்கை அழகை பார்த்து ரசிக்க வசதியாக இங்கு இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு பரந்து விரிந்து காணப்படும் பச்சைத் தேயிலைத் தோட்டங்கள், அழகிய இயற்கைக் காட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த மலைவாசஸ்தலத்தை புகழ்பெற்ற ஹனிமூன் ஸ்தலமாக திகழச்செய்துகொண்டிருக்கின்ற

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியின் அழகிய கடற்கரைகளில் காத்து வாங்கிக்கொண்டு காதல் செய்வதும், கடலோர ரிசார்ட்டுகளில் உல்லாசமாக பொழுதைக் கழிப்பதும் அழகான அனுபவமாகும். இதன் காரணமாகவே இங்கு காதல் ஜோடிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

அந்தமான் நிகோபார் 

தீவுகள் கன்னிமை குறையாத கடற்கரைகள், ஸ்கூபா டைவிங் போன்றவற்றோடு அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன. இயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும், வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம். இதுபோன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதி.
Read more ...