Recent Post
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

அடுத்த முதல்வராக யார்? செய்தி ஒளிபரப்பும் கன்னட சேனல்கள்

அடுத்த முதல்வராக யார்?  செய்தி ஒளிபரப்பும் கன்னட சேனல்கள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டதாக கன்னட சேனல்கள் செய்தி ஒளிபரப்பி வருகின்றன. ஜெயலலிதா கோர்ட்டுக்குள் காலை 11 மணிக்கு சென்றார். இந்நிலையில், சிறிது நேரத்திலேயே தீர்ப்பு வாசிக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் ஜெயலலிதா மீது சட்டப் பிரிவு 13 (1) இ படி குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாகவும் கன்னட சேனல்களில் செய்தி ஒளிபரப்பாகிறது.
கோர்ட் வட்டார தகவல்கள் தெரிவித்ததாக கன்னட டிவி சேனல்களில் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருமே தீர்ப்பு குறித்து தெரிவிக்காத நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கன்னட சேனல்களில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுதான் வேடிக்கையின் உச்சமாக உள்ளது. ஒருவேளை காவிரி உள்ளிட்ட விவகாரங்களினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற செய்திகள் கசியவிடப்படுகிறதா என்று தெரியவில்லை. வழக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, மதியம் 1 மணிக்கு தீர்ப்பு விவரம் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ...

இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல்-காய்தா

இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல்-காய்தா
அல்-காய்தாவின் தலைவர் அய்மான் அல்ஜவாஹிரி தமது 55 நிமிட வீடியோ உரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்: “அல்-காய்தாவின் கிளையை இந்தியாவில் தொடங்கவிருக்கிறோம். பர்மா, வங்கதேசம், அசாம், குஜராத், காஷ்மீர் ஆகிய இடங்களில் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் போராடப்போகிறோம். இஸ்லாமிய கிலாபத்தை நிறுவப்போகிறோம்.
” இந்தப் பேச்சு, நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், உளவுத் துறை ஆகியன இதுகுறித்துக் கவலையையும் அச்சத்தையும் தெரிவித்துள்ளன. அல்-காய்தாவின் அறிக்கையினால், இவர்கள் எல்லாரையும்விட அதிக ஆத்திரமும் கவலையும் கொண்டுள்ளனர் முஸ்லிம் சமுதாயத்தினர்.
சோவியத் எதிர்ப்பால் பிறந்த அமைப்பு
1980-களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் படையெடுத்தபோது, அவர்களை விரட்டுவதற்காக அமெரிக்க உளவுத் துறையின் தார்மிக, பொருளாதார, ஆயுத உதவியோடு தொடங்கப்பட்ட இயக்கமே அல்-காய்தா. ஒசாமா பின்லேடன் அதன் தலைவ ராக இருந்தார். ரஷ்யர்களை ஆப்கன் மண்ணிலிருந்து விரட்டியடித்ததும் அல்-காய்தாவுக்கும் அமெரிக்கா வுக்கும் பகை மூண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளானார் கள். அல்-காய்தா பயங்கரவாத வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்கள் நிகழ்த்தின.
இராக்கில் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி, அங்குள்ள சிறுபான்மையினரையும் யஜீதிகளையும் ஷியாக்களையும் கிறித்தவர்களையும் கொன்று குவித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பும் இவர்களிடமிருந்து பிரிந்து சென்றதுதான். இப்போது இவ்விரு அமைப்புகளுக்கிடையே கடும் பகை நிலவிவருகிறது. இஸ்லாமிய கிலாபத்தை அமைத்துவிட்டோம் என்று உலக முஸ்லிம்களின் ஆதரவை, குறிப்பாக இளைஞர்களின் ஆதரவைப் பெற ஐஎஸ்ஐஎஸ் முயல்கிறது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வேகமான வளர்ச்சி அல்-காய்தாவுக்குப் பீதியை ஏற்படுத்தியது. அல்-காய்தா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, சரிந்துவரும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த அல்-காய்தா இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவர்களுக்கு ஆதரவு கிடைக்காது
அல்-காய்தா தனிமனிதர்களை உசுப்பி அதன் மூலம் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முயற்சிக்கக்கூடுமே தவிர, ஓர் அமைப்பாக இந்தியாவில் தடம்பதிக்க முடியாது. சர்வாதிகார, எதேச்சாதிகார, மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்பு ஏற்பட்டிருப்பதால், அந்த நாடுகளில் அல்-காய்தாவுக்கு எளிதில் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால், இந்தியா போன்ற வலுவான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, பன்மைச் சமூக அமைப்பு கொண்ட நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கிடைக்காது.
இந்திய முஸ்லிம்களும் பயங்கரவாத இயக்கங்கள் குறித்துத் தெளிவான பார்வையுடன் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் இஸ்லாமிய அறநெறிகளுக்கு முரணானது. ‘எவனொருவன் ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்கிறானோ அவன் மனித இனத்தையே கொலை செய்தவனாவான்’ என்கிறது திருக்குர்ஆன். அத்துடன் போர் தர்மங்களையும் தெளிவாக வகுத்துள்ளது இஸ்லாம். “போர்முனையில் இல்லாதவர்களை (பொதுமக்களை), முதியோர், குழந்தைகள், பெண்கள், மடங்களில் உள்ள துறவிகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், இந்த பயங்கரவாதிகளோ பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டுவைப்பதையும், விமானங்களைக் கடத்துவதையும், பத்திரிகை நிருபர்களைக் கொலை செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, இந்த பயங்கரவாதக் குழுக்கள் விளிம்பு நிலைக் குழுக்களாகச் செயல்படுகின்றனவே அன்றி, மையநீரோட்டத்தில் அவர்களால் இணைய முடியவில்லை. பயங்கரவாதத்தில் ஈடுபடாத அமைப்புகளே பெரும்பான்மை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
நோயைவிட மருந்து மோசமாகலாம்
எகிப்தில் ராணுவ சர்வாதிகாரிகள் கடந்த 80 ஆண்டு காலமாக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட நிலையிலும், இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் ஜனநாயகப் பாதையிலேயே போராடிவந்தது கவனிக்கத் தக்கது. பயங்கரவாதம் ஒருபோதும் ஒரு சமூகத்தின் பிரச்சினையைத் தீர்த்துவைக்காது. மேலும் சிக்கலாக்கி, அந்தச் சமூகம் பழிப்புக்கும் நெருக்கடிக்கும் உட்படுத்தப்படும். நோயை விட மருந்து மோசமானது என்ற நிலையே உருவாகும். எனவே, அநீதிக்கு எதிராக நீதியான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகள் தீரும். எனவே, அல்-காய்தாவின் இந்த அறிவிப்பினால் முஸ்லிம்களுக்குப் பாதிப்புகளே அதிகமாகும்.
பயங்கரவாதம் இந்திய மண்ணில் கால்பதிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே முஸ்லிம் தலைவர்களும், சமய அறிஞர்களும், முஸ்லிம் அமைப்புகளும், அதனை வன்மையாகக் கண்டித்துவருகின்றனர். இதன் காரணமாகவே முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத வலையில் விழாமல் காப்பாற்றப்பட்டனர்.
இந்திய அளவில் எதிர்ப்புகள்
அல்-காய்தா தலைவர் ஜவாஹிரியின் சமீபத்திய அறிக்கையையும் முஸ்லிம் தலைவர்கள் கடுமையாகவே எதிர்த்துள்ளனர். இந்தியாவிலுள்ள முக்கியமான 12 அமைப்புகளின் கூட்டமைப்பாக விளங்கும் ‘முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்’தின் தலைவர் டாக்டர் ஜபருல் இஸ்லாம் கூறியிருப்பதாவது: “இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் விசுவாசமான குடிமக்கள். அல்-காய்தா இங்கு கால்வைக்க முயற்சித்தால், அதனை முஸ்லிம்கள் வன்மையாக எதிர்ப்பார்கள்.
இந்திய முஸ்லிம்கள் இந்திய அரசியல் சாசனத்தினாலும், இந்தியச் சட்டங்களினாலும் பாதுகாப்புப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் போலியான உதவி தேவையில்லை. அந்த அமைப்பு மத்திய கிழக்கில் பெரும் அழிவையும், நிலையற்ற தன்மையையும் தோற்றுவித்துள்ளது. இவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் இவர்களின் சிந்தனையைப் பரப்புபவர்களைத் துரத்தியடிக்கும்படியும் இந்திய முஸ்லிம்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அப்துல் ஹபீஸ் பாரூக்கி “அல்-காய்தாவின் கொள்கை இந்திய முஸ்லிம்கள் மீது செல்வாக்குச் செலுத்த எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறியுள்ளார். இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்ததும், முஸ்லிம்களின் செல்வாக்குப் பெற்றுள்ளதுமான தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமியப் பல்கலைக் கழகம் ஜவாஹிரியைக் கண்டித்துள்ளது.
அகில இந்திய மில்லி கவுன்சிலின் தலைவர் எம்.ஏ. காலித் “அல்-காய்தா எங்களின் நண்பர்களல்ல. அவர்கள் அப்பாவிகளைக் கொல்கின்றனர். இஸ்லாத்தின் பெயரில் கொலைகளைச் செய்து இஸ்லாத்தை இழிவுபடுத்துகின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் எதிரிகள். எங்களுக்கு அவர்களின் அனுதாபம் தேவையில்லை” என்று கூறுகிறார். “இந்துக்களே எங்களின் நண்பர்கள். சிறுபான்மையினருக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டபோது எங்களுக்காகப் போராடியவர்கள் அவர்களே” என்கிறார் உருது எழுத்தாளர் ஹஸன் கமால். அல்-காய்தா பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவே.
அரசு செய்ய வேண்டியது
அல்-காய்தாவின் நடவடிக்கை இந்தியாவில் ஊடுருவாமல் இருக்க உளவுத் துறையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அப்பாவிகளை வேட்டையாடுவதால் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியாது. அத்தோடு சிறுபான்மையினர், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் போன்ற பலவீனமான மக்களின் பிரச்சினைகளைக் கிடப்பில் போடாமல் உடனுக்குடன் தீர்வு காண்பதாலும் பயங்கரவாதச் செயல்களின்பால் அவர்கள் கவரப்படுவதைத் தடுக்க முடியும்.
உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் பொய்க் காரணங்களைக் கூறி ஒரு நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும், தலையாட்டி பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கவும் அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும்.
கொடுமையான ஆட்சியாளர்களை மாற்றும் பொறுப்பு அந்த நாட்டு மக்களிடமே விட்டுவிட வேண்டும். ஜனநாயகம் பேசிக்கொண்டே உலக சர்வாதிகாரிகளையும் மன்னர்களையும் காப்பாற்றும் இரட்டை நிலையைக் கைவிட வேண்டும். இவர்களது இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளால் வெறுப்பும் விரக்தியும் கொண்ட இளைஞர்கள் பயங்கரவாதச் சிந்தனைகளுக்குப் பலியாகின்றனர். அரசு பயங்கரவாதமும் குழு பயங்கரவாதமும் ஒரு விஷச் சக்கரமாகும். இந்தச் சக்கரம் உடைக்கப்படுவதன் மூலமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்
Read more ...

ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி சாத்தியமா?யோசனை கேட்கிறது பிரதமர் அலுவலகம்

ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி சாத்தியமா?
ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
தைத் தொடர்ந்தே இப்படி ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி ஓடும் ரயில்கள் மூலமான காற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது. ஆனால் இப்படியான காற்றாலைகள் மூலம் மிகக் குறைந்த அளவுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தமே 25 நிமிடங்கள்தான் காற்றாலைகள் இயங்க முடியும். இதனால் இது கூடுதல் செலவு ஏற்படுத்தும் திட்டம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Read more ...

ரொமான்டிக்காக இருக்க வேண்டுமா..?

ரொமான்டிக்கா இருக்க வேண்டுமா..?
கணவர்கள் தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டாக தத்தம் மனைவியரிடம் எப்பொழுதும் ரொமான்ஸ் செய்வது வழக்கம். அதே நேரம், தம்பதிகளுக்குள்ளான உறவுமுறை ஆரோக்கியமாகவும், காதல் மேலும் ஊற்றெடுக்கும் வகையில் இருக்கவும், மனைவியரும் தங்களிடம் ரொமான்ஸை பராமரிக்க வேண்டும். 
 ரொமான்ஸ்க்கு அடிப்படையான விஷயமாக இருப்பது குறும்புகளாகும்; ரொமான்ஸ் செய்வதற்கு மிகவும் முக்கியமான விஷயங்களாக இருப்பது ஏற்கனவே உறுதியாக இருக்கும் பிணைப்பை நிலைநிறுத்துவதும் மற்றும் அதற்கு மரியாதை அளிப்பதும், அதைப் பற்றி எண்ணுவதும், ஆர்வத்துடனும் இருப்பதும் ஆகியவைகளே.

அவருடைய விருப்பங்களை கவனித்தல் 

கணவர்களை வெளியே அழைத்துச் செல்லும் வகையில் திட்டமிடச் சொல்லும் வேளைகளில், அவர்களுக்குப் பிடித்தமான சில செயல்களை செய்து, தங்களுடைய மனைவியருடன் மகிழ்ச்சியுடன் கழிக்க நினைப்பார்கள். ஒரு ஹாக்கி விளையாட்டாகவோ, மல்யுத்தமாகவோ அல்லது குழுவாக வெளியே சென்று வரும் டேட்டிங் என எதுவாக இருந்தாலும், தங்களுடைய மனைவியரும் கைகோர்த்துக் கொண்டு வரத் தயார் என்றால் கணவர்களுக்கு குஷி தான்

பாராட்டுங்கள் 

திருமணமான தம்பதிகள், சில நேரங்களில் மற்றவர்களிடம் என்ன நிறைகள் உள்ளன என்று பாராமல், குறைகளை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுடைய கணவர்களிடம், வீட்டை சுத்தம் செய்தல், சமைத்தல் மற்றும் அது போன்ற வீட்டு வேலைகளை செய்வதை சொல்லி குறைபட்டுக் கொள்வார்கள். ஆனால், அந்த வேளைகளில் கணவருடைய புதிய ஹேர்கட் ஸ்டைலைப் பற்றி பாராட்டுவதும், அவர் செய்த செயலைப் பற்றி சிறப்பாக பேசுவதும் நல்ல ரொமான்ஸை கொடுக்கும்.

பொழுதுபோக்கு 

உங்களுடைய கணவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் எது உங்களுக்கும் பிடிக்கும் என்பதை பொறுப்புள்ள மனைவியானவள் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும். உலகளவில் பிரபலமான உணவுகள், பனிச்சறுக்கு, மாதிரி விமானங்கள் உருவாக்குதல் அல்லது ஸ்கை டைவிங் என எந்தவொரு விருப்பமான விஷயத்தை செய்யும் போதும், தம்பதியர் கைகோர்த்துக் கொண்டு செய்தால், உங்களிடம் ரொமான்ஸ் கூடிக் கொண்டே போகும்

கேளுங்கள்! 

பேசுவதை கேட்பது ரொமான்டிக்காக இருப்பதற்கு மிகவும் முக்கியமான தகுதியாகும். ஏனெனில், அதன் மூலம் மனைவிகள் தங்களுடைய கணவருடைய விருப்பங்கள் மற்றும் தேவைகளை மிகவும் நன்றாக, விரிவாக புரிந்து கொள்ள முடியும். கணவர்கள் இந்த அதிகபட்ச கவனத்தை குறிப்பிட்டு சொல்லும் வேளைகளில், அன்பு அதிகரிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

அவருக்காக குரல் கொடுத்தல் 

ஆண்கள் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவர்கள் தான், ஆனால் அவர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படும். ஒரு பெண்ணுடைய கணவரைப் பற்றி, குடும்ப உறுப்பினரோ, நண்பரோ அல்லது புதியவர் ஒருவரோ தவறாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளைகளில், மனைவியானவள் எந்தவித மாற்று எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் கணவருக்காக பரிந்து பேச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கணவரும் பயமில்லாமல் தன்னுடைய பெருமையை நிலைநாட்ட முயற்சிப்பார்.
Read more ...