சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என
அறிவிக்கப்பட்டுவிட்டதாக கன்னட சேனல்கள் செய்தி ஒளிபரப்பி வருகின்றன.
ஜெயலலிதா கோர்ட்டுக்குள் காலை 11 மணிக்கு சென்றார். இந்நிலையில், சிறிது
நேரத்திலேயே தீர்ப்பு வாசிக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் ஜெயலலிதா மீது
சட்டப் பிரிவு 13 (1) இ படி குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாகவும் கன்னட
சேனல்களில் செய்தி ஒளிபரப்பாகிறது.
கோர்ட் வட்டார தகவல்கள் தெரிவித்ததாக
கன்னட டிவி சேனல்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருமே தீர்ப்பு குறித்து தெரிவிக்காத நிலையில்,
தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கன்னட
சேனல்களில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுதான் வேடிக்கையின் உச்சமாக
உள்ளது.
ஒருவேளை காவிரி உள்ளிட்ட விவகாரங்களினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால்
இதுபோன்ற செய்திகள் கசியவிடப்படுகிறதா என்று தெரியவில்லை.
வழக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, மதியம் 1
மணிக்கு தீர்ப்பு விவரம் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment