Recent Post
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா?: ஃபேஸ்புக்கை கலக்கும் அர்னால்ட், சூர்யா

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா?: ஃபேஸ்புக்கை கலக்கும் அர்னால்ட், சூர்யா
சூர்யா ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை சந்தித்தபோது எடுத்த போட்டோவில் சிங்கம் பட வசனத்தை போட்டு அதை ஃபேஸ்புக்கில் பிரபலமாக்கியுள்ளனர் ரசிகர்கள். 
ஐ பட இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை ஹோட்டல் லீலா பேலஸில் உள்ள ஜிம்மில் சந்தித்து பேசினார் சூர்யா. சந்தித்து பேசியதோடு மட்டும் அல்லாமல் அர்னால்ட் எழுதிய உடற்பயிற்சி குறித்த புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆட்டோகிராப் வாங்கினார் சூர்யா.
இது தான் எங்களுக்கு எல்லாமே தெரியுமே இதையே ஏன் மறுபடியும் கூறுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூர்யா, அர்னால்ட் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தில் சூர்யாவின் சிங்கம் படத்தில் வரும் வசனத்தை இணைத்துள்ளனர் குறும்புக்கார ரசிகர்கள். 
அதாவது அர்னால்ட் சூர்யாவை பார்த்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா என்று கேட்கிறாராம். அதற்கு சூர்யா, அய்யோ அது சத்தியமா நான் இல்லீங்கண்ணா என்று பவ்யமாக கூறுகிறாராம். இந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.
Read more ...

ஹாரிஸ் போட்ட தாலாட்டு... பரவசத்துடன் பாடி நடித்த தல 55

ஹாரிஸ் போட்ட தாலாட்டு... பரவசத்துடன் பாடி நடித்த தல 55
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பெயர் சூட்டப்படாத தல 55 படத்துக்காக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருவாக்கிய தாலாட்டுப் பாடல் மிகவும் பிடித்துப் போனதால் அதைப் பாடி நடித்தாராம் அஜீத்.  கவுதம்மேனன், இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கின்றனர். ஏற்கனவே ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது

ஹாரிஸ் 

 தற்போது படக் குழுவினர் சிக்கிம் சென்றுள்ளனர். இந்த படத்துக்காக இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மூன்று பாடல்களைக் கொடுத்துவிட்டார். இதனை அவரே தெரிவித்து உள்ளார்.

பாராட்டு 

இந்த பாடல்கள் அஜீத்துக்கு மிகவும் பிடித்து போனதாம். ஹாரீஸ் ஜெயராஜை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மூன்று பாடல்களில் ஒன்று தாலாட்டு பாடலாகும். தாலாட்டு... என்று தொடங்கும் இந்த பாடலை அஜீத் தனது மகளாக நடிக்கும் அனிகாவுடன் பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம். அஜீத் மிகவும் பரவசமாக இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாராம்.

சிக்கிம் 

சிக்கிம், ஜோத்பூர், சண்டிகார், டெல்லி போன்ற இடங்களில் இந்த பாடல் காட்சியைப் படமாக்குகின்றனர். இந்த மூன்று பாடல்கள் தவிர மேலும் இரண்டு பாடல்களை இந்த படத்துக்காக கம்போஸ் செய்து வருவதாக ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

என்ன தலைப்பு 

இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தலைப்பு முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்தார்.
Read more ...

நான் தியாகியான்னு தெரியாது... ஆனா துரோகியில்லை

நான் தியாகியான்னு தெரியாது... ஆனா துரோகியில்லை
நான் தியாகியான்னு தெரியாது... ஆனா துரோகியில்லை என்று கத்தி பட விழாவில் பேசினார் நடிகர் விஜய். கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்ப்பு மற்றும் கடும் கெடுபிடிகளுக்கிடையில் நேற்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஏதோ ஒரு அவஸ்தையில் இருப்பவர்களைப் போலவே காட்சி அளிக்க, விஜய் மட்டும் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்தார்.

வதந்திக்கு விளக்கம் 

விழாவில் அவர் பேசுகையில், "உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது இன்னும் தெளிவாக விளங்கும். ஆனால் வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அது உண்மையாகிடும்.

சண்டை போடறதுக்கில்ல 

படம் எடுக்கிறதுங்கிறது சண்டை போடறதுக்குல்ல.. சண்டை சச்சரவுகளை மறந்து பார்த்து ரசிக்கிறதுக்குதான்.

துரோகியில்ல 

நான் தியாகியா என்னன்னு தெரியாது. ஆனா தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்லை. எந்த ஒரு மக்களுக்கும் ஆதரவாகவோ, இல்ல எதிராகவோ இந்தப் படத்தை எடுக்கல.. அது மட்டும் நிச்சயம்.
பழகிவிடும் ஒரு படத்தில் ஒரு வசனம் உண்டு, ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருக்கும் பிறகு போக போக அதுவே பழகிவிடும்," என்றார்.
மறைமுகமாக இந்த விழாவில் கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நேரடியாக எதையும் பேசவில்லை விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ...

இன்று ஒரே மேடையில் 'எந்திரனும்' 'டெர்மினேட்டரும்'!

இந்திய சினிமாவுலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டம்  அதுதான் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த விழாவுக்கு ஹாலிவுட் நடிகர், இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா என டெர்மினேட்டரில் ஆக்ஷனில் மலைக்க வைத்த அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். பணம் கொடுத்துவிட்டார்களே என்பதற்காக அவர் வரவில்லை. இந்திய சினிமா விழாவொன்றில் பங்கேற்க வேண்டும் என உண்மையாகவே ஆசைப்பட்டு வந்திருப்பதாக அர்னால்ட் கூறியிருந்தார்.

அர்னால்டின் ஆசை 

அதுமட்டுமல்ல, இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியுடன் ஒரே மேடையில் பங்கேற்க வேண்டும் என்பதும் அவரது இன்னொரு ஆசை. விழாவுக்கு வர ஒப்புக் கொண்டபோதே, இதையும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் தெரியப்படுத்தினாராம் அர்னால்ட்.

ஷங்கரின் சென்டிமென்ட் 

ஷங்கரைப் பொருத்தவரை, தனது முதல் படமான ஜென்டில்மேனிலிருந்து தன் படங்களில் ஏதாவது ஒரு வகையில் ரஜினி இருக்க வேண்டும் என்று நினைப்பவர். 'ரஜினி சாரை என் குடும்பத்தில் ஒருவராக மதிக்கிறேன். அவர் ஏதோ ஒரு வகையில் என் படத்தில் இருந்தால் சென்டிமென்டாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்," என்று ஈரம் பட விழாவில் ஷங்கர் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

ரஜினி 

அர்னால்டின் ஆசை, ஷங்கரின் சென்டிமென்ட் இந்த இரண்டையும் மதித்து, தனது லிங்கா பட ஷூட்டிங்கையும் தள்ளி வைத்து விட்டு விழாவில் கலந்து கொள்ள ஷிமோகாவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

எந்திரனும் டெர்மினேட்டரும் 

சினிமா ரசிகர்களுக்கு இதைவிட கொண்டாட்டமான நாள் இருக்க முடியாது. திரையில் தாங்கள் பார்த்து பிரமித்த டெர்மினேட்டர் நாயகனையும், எந்திரன் சிட்டியையும் ஒரே மேடையில் பார்ப்பது அத்தனை சாதாரண விஷயமா என்ன!!
Read more ...

வெடி வைத்தும் பயப்படாத குரங்குகள் நடிகையை பார்த்து தெறித்து ஓட்டம்

வெடி வைத்தும் பயப்படாத குரங்குகள் நடிகையை பார்த்து தெறித்து ஓட்டம்
வெடிச்சத்தம் கேட்டும் பயந்து ஓடாத குரங்குகள் பேய் வேடத்தில் இருந்த சுஹாசினியை பார்த்து மிரண்டு ஓடியுள்ளன. பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த வினுபாரதி மூச் என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் நிதின், மிஷா கோஷல், சுஹாசினி மணிரத்னம், பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூச் ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதையாம்.

படப்பிடிப்பு 

கிருஷ்ணகிரி அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் தென்னந்தோப்பில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அந்த தோட்டத்தில் ஏராளமான குரங்குகள் இருந்துள்ளன.

சுஹாசினி படத்தில் 

சுஹாசினி பேயாக வருவாராம். அதற்காக அவர் பேய் போன்று மேக்கப் போட்டு அது காய்வதற்காக வெயில் அடிக்கும் இடத்தில் தோப்பில் உட்கார்ந்திருக்கிறார்.

குரங்குகள் 

தோட்டத்தில் இருந்த சுமார் 50 குரங்குகள் பேய் வேடத்தில் இருந்த சுஹாசினியை பார்த்து மிரண்டு ஓடியுள்ளன.

தோட்டக்காரர் 

வெடிகுண்டு வைத்தும் ஓடாத இந்த குரங்குகள் இந்த நடிகையை பார்த்து பயந்து ஓடிவிட்டன. மேலும் 4 தோப்புகளில் உள்ள குரங்குகளை விரட்ட அந்த நடிகையை கொஞ்சம் அனுப்புகிறீர்களா என்று இயக்குனரிடம் தோட்டக்காரர் கேட்டுள்ளார்.

Read more ...

விபச்சாரம்தான் குடும்பத்தைக் காக்க ஒரே வழி என்றால் என்ன தவறு அதில்?.. கேட்கிறார் தீபிகா!

விபச்சாரம்தான் குடும்பத்தைக் காக்க ஒரே வழி என்றால் என்ன தவறு அதில்?.. கேட்கிறார் தீபிகா!
விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதா பாசுவுக்கு நடிகை குஷ்பு மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2ம் தேதி ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை சுவேதா பாசு. இவர் தமிழில் ‘ராரா', ‘சந்தமாமா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
‘மக்தே' படத்திற்காக தேசிய விருது பெற்றவரான சுவேதா பண நெருக்கடியாலும், குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுவேதா பாசுவுக்கு திரையுலகப் பிரபலங்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் தீபிகா படுகோனேவும் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக தீபிகா படுகோனே கூறியிருப்பதாவது :-

தப்பேயில்லை... 

தன்னையும், குடும்பத்தையும் காப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் இதுதான் (விபசாரம்) ஒரே வழி என்றால், அதை செய்வதில் தப்பில்லை.

நியாயமற்றது... 

எனவே மக்கள் கூறுவதைப்போல அவரைப்பற்றி இழிவாக பேசுவது நியாயமற்றது என நான் நினைக்கிறேன்.

உதவி செய்யவில்லை... 

அப்படி பார்த்தால், அவரை இந்த செயலில் ஈடுபடுத்தியவர்கள் குறித்து நாம் ஏன் பேசவில்லை? தற்போது வரை சுவேதாவை நம் எல்லோருக்கும் தெரியும். எனினும் நாம் ஏன் அவருக்கு உதவி செய்யவில்லை?

நடவடிக்கை தேவை... 

எனவே அவரைக்குறித்து தவறாக பேசுவதற்கு பதிலாக அவருக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே?' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மட்டுமா குற்றவாளிகள்... 

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், ‘விபசார தொழில் குறித்த விஷயங்களில் முதலில் பெண்களை மட்டும் தான் மையப்படுத்துகின்றனர். பாலியல் தொழிலில் ஆண்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே? ஆனால் ஆண்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன.

ஆண்களின் பங்கு... 

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் போது, அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகின்றன. ஆனால் அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது.

சமபங்கு... 

இந்த குற்றத்தில் அந்த ஆணுக்கும் சம பங்கு இருக்கிறதுதானே? ஏன் இந்த பாரபட்சம்? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்?

போட்டோ எடுக்க போட்டி... 

பெண்களை கைது செய்யும் போது புகைப்படம் எடுக்க போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களையும் புகைப்படம் எடுக்க வேண்டியதுதானே? அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை' என இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
Read more ...

இந்த நயன்தாராவுக்கு மட்டும் எப்படி 'ஒர்க்-அவுட் ஆகுது

இந்த நயன்தாராவுக்கு மட்டும் எப்படி 'ஒர்க்-அவுட் ஆகுது
நயன்தாரா காட்டில் சோ என்று வாய்ப்பு மழை பொழியக் காரணம் ஹீரோக்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. நயன்தாராவின் செகண்ட் இன்னிங்ஸ் மிகவும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக சினிமாவை விட்டு விலகியவர் அந்த காதல் முறிந்ததால் மீண்டும் நடிக்க வந்தார். காதல் முறிவுக்கு பிறகு நயனுக்கு வாய்ப்புகள் வருமா என்று பலர் நினைத்தபோது அவர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார்.


அஜீத் முதல் இன்னிங்ஸில் ஜோடி சேர்ந்த அஜீத்துடன் இரண்டாம் இன்னிங்ஸில் ஆரம்பம் படம் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்தார் நயன்.


இளம் ஹீரோக்கள் அஜீத்தை தவிர்த்து தொடர்ந்து இளம் ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அது எப்படி இந்த நயனுக்கு மட்டும் வாய்ப்புகள் வருகிறது என்று நினைக்கலாம்.

ஹீரோக்களே 

நயன்தாராவை தங்களின் ஜோடியாக்குமாறு இளம் ஹீரோக்கள் தான் வாய் விட்டு கேட்கிறார்களாம். அதனாலேயே தயாரிப்பாளர்களும் நயன் வீட்டு வாசலில் நிற்கிறார்கள்.

அப்படி என்ன? 

இப்படி ஹீரோக்கள் நயன்தாரா தான் ஜோடியாக வேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு அவரிடம் என்ன உள்ளது என்று நீங்கள் ரூம் போட்டு யோசிக்க செல்ல வேண்டாம். அந்த கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு சொல்கிறார்களே அது நயன்தாராவுடன் சூப்பராக இருக்கும் என்று ஹீரோக்கள் நினைப்பது தான் அவருடன் நடிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

விஜய் ராஜா ராணி 

இயக்குனர் அட்லீயின் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அவருக்கு மட்டும் 

நயன்தாராவுக்கு மட்டும் எப்படி இந்த கெமிஸ்ட்ரி கை கொடுக்கிறது என்று பிற நடிகைகள் வியக்கிறார்கள். தெலுங்கு படங்களில் நடிக்க நயனுக்கு தடை விதிக்கப்பட்டால் என்ன. தமிழிலில் தான் அவருக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்துக் கொண்டு போகிறதே.

திக்குமுக்காடி 

ஹீரோக்கள் தன் மீது வைத்திருக்கும் மதிப்பை பார்த்து நயன்தாரா திக்குமுக்காடிப் போயுள்ளாராம்.
Read more ...

ரொமான்டிக்காக இருக்க வேண்டுமா..?

ரொமான்டிக்கா இருக்க வேண்டுமா..?
கணவர்கள் தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டாக தத்தம் மனைவியரிடம் எப்பொழுதும் ரொமான்ஸ் செய்வது வழக்கம். அதே நேரம், தம்பதிகளுக்குள்ளான உறவுமுறை ஆரோக்கியமாகவும், காதல் மேலும் ஊற்றெடுக்கும் வகையில் இருக்கவும், மனைவியரும் தங்களிடம் ரொமான்ஸை பராமரிக்க வேண்டும். 
 ரொமான்ஸ்க்கு அடிப்படையான விஷயமாக இருப்பது குறும்புகளாகும்; ரொமான்ஸ் செய்வதற்கு மிகவும் முக்கியமான விஷயங்களாக இருப்பது ஏற்கனவே உறுதியாக இருக்கும் பிணைப்பை நிலைநிறுத்துவதும் மற்றும் அதற்கு மரியாதை அளிப்பதும், அதைப் பற்றி எண்ணுவதும், ஆர்வத்துடனும் இருப்பதும் ஆகியவைகளே.

அவருடைய விருப்பங்களை கவனித்தல் 

கணவர்களை வெளியே அழைத்துச் செல்லும் வகையில் திட்டமிடச் சொல்லும் வேளைகளில், அவர்களுக்குப் பிடித்தமான சில செயல்களை செய்து, தங்களுடைய மனைவியருடன் மகிழ்ச்சியுடன் கழிக்க நினைப்பார்கள். ஒரு ஹாக்கி விளையாட்டாகவோ, மல்யுத்தமாகவோ அல்லது குழுவாக வெளியே சென்று வரும் டேட்டிங் என எதுவாக இருந்தாலும், தங்களுடைய மனைவியரும் கைகோர்த்துக் கொண்டு வரத் தயார் என்றால் கணவர்களுக்கு குஷி தான்

பாராட்டுங்கள் 

திருமணமான தம்பதிகள், சில நேரங்களில் மற்றவர்களிடம் என்ன நிறைகள் உள்ளன என்று பாராமல், குறைகளை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுடைய கணவர்களிடம், வீட்டை சுத்தம் செய்தல், சமைத்தல் மற்றும் அது போன்ற வீட்டு வேலைகளை செய்வதை சொல்லி குறைபட்டுக் கொள்வார்கள். ஆனால், அந்த வேளைகளில் கணவருடைய புதிய ஹேர்கட் ஸ்டைலைப் பற்றி பாராட்டுவதும், அவர் செய்த செயலைப் பற்றி சிறப்பாக பேசுவதும் நல்ல ரொமான்ஸை கொடுக்கும்.

பொழுதுபோக்கு 

உங்களுடைய கணவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் எது உங்களுக்கும் பிடிக்கும் என்பதை பொறுப்புள்ள மனைவியானவள் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும். உலகளவில் பிரபலமான உணவுகள், பனிச்சறுக்கு, மாதிரி விமானங்கள் உருவாக்குதல் அல்லது ஸ்கை டைவிங் என எந்தவொரு விருப்பமான விஷயத்தை செய்யும் போதும், தம்பதியர் கைகோர்த்துக் கொண்டு செய்தால், உங்களிடம் ரொமான்ஸ் கூடிக் கொண்டே போகும்

கேளுங்கள்! 

பேசுவதை கேட்பது ரொமான்டிக்காக இருப்பதற்கு மிகவும் முக்கியமான தகுதியாகும். ஏனெனில், அதன் மூலம் மனைவிகள் தங்களுடைய கணவருடைய விருப்பங்கள் மற்றும் தேவைகளை மிகவும் நன்றாக, விரிவாக புரிந்து கொள்ள முடியும். கணவர்கள் இந்த அதிகபட்ச கவனத்தை குறிப்பிட்டு சொல்லும் வேளைகளில், அன்பு அதிகரிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

அவருக்காக குரல் கொடுத்தல் 

ஆண்கள் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவர்கள் தான், ஆனால் அவர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படும். ஒரு பெண்ணுடைய கணவரைப் பற்றி, குடும்ப உறுப்பினரோ, நண்பரோ அல்லது புதியவர் ஒருவரோ தவறாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளைகளில், மனைவியானவள் எந்தவித மாற்று எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் கணவருக்காக பரிந்து பேச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கணவரும் பயமில்லாமல் தன்னுடைய பெருமையை நிலைநாட்ட முயற்சிப்பார்.
Read more ...