கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பெயர் சூட்டப்படாத தல 55
படத்துக்காக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருவாக்கிய தாலாட்டுப் பாடல்
மிகவும் பிடித்துப் போனதால் அதைப் பாடி நடித்தாராம் அஜீத்.
கவுதம்மேனன், இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கின்றனர்.
ஏற்கனவே ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது
ஹாரிஸ்
தற்போது படக் குழுவினர் சிக்கிம் சென்றுள்ளனர். இந்த படத்துக்காக
இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மூன்று பாடல்களைக் கொடுத்துவிட்டார். இதனை
அவரே தெரிவித்து உள்ளார்.
பாராட்டு
இந்த பாடல்கள் அஜீத்துக்கு மிகவும் பிடித்து போனதாம். ஹாரீஸ் ஜெயராஜை
வெகுவாகப் பாராட்டியுள்ளார். மூன்று பாடல்களில் ஒன்று தாலாட்டு பாடலாகும்.
தாலாட்டு... என்று தொடங்கும் இந்த பாடலை அஜீத் தனது மகளாக நடிக்கும்
அனிகாவுடன் பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம். அஜீத் மிகவும் பரவசமாக
இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாராம்.
சிக்கிம்
சிக்கிம், ஜோத்பூர், சண்டிகார், டெல்லி போன்ற இடங்களில் இந்த பாடல்
காட்சியைப் படமாக்குகின்றனர். இந்த மூன்று பாடல்கள் தவிர மேலும் இரண்டு
பாடல்களை இந்த படத்துக்காக கம்போஸ் செய்து வருவதாக ஹாரீஸ் ஜெயராஜ்
தெரிவித்தார்.
என்ன தலைப்பு
இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தலைப்பு முடிவு
செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குநர்
கவுதம் மேனன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment