Recent Post
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!

அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!
பலர் காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான ஒன்று எழுந்ததும் மொபைலைப் பார்ப்பது. மேலும் சிலர் எழுந்திருக்கும் போதே எதற்காக விடிந்தது என்று எரிச்சலுடன் எழுந்திருப்பார்கள். இதுப்போன்று ஒருசில விஷயங்களை மக்கள் காலை வேளையில் செய்து வருகிறார்கள். நீங்கள் காலையில் எப்போதும் குழப்பமான மனநிலையோடு எழுந்திருக்கிறீர்களா? காலை உணவைத் தவிர்க்கிறீர்களா? அப்படியெனில் சில எளிய மாற்றங்கள் உங்கள் காலை நேரத்தை இதமாக்கும். அந்த மாற்றங்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சட்டென எழுந்து ஜிம்மிற்குச் செல்லுதல் 

காலை என்பது ஒரு நிதானமான நேரம். எனவே அமைதியாக, மெதுவாக எழுந்து உங்களது தசைகளை மெதுவாக அசையுங்கள். நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது உங்கள் வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருங்கள். இது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சீராக்கும்.

நெட்டிமுறிக்காமை 

நாம் காலையில் எழுந்திருக்கும் போது, நமது தசைகள், குறிப்பாக முதுகெலும்பு சற்று விறைப்பாக இருக்கும். நாம் நெட்டிமுறிக்காமல் எழுந்திருக்கும் போது இந்த விறைப்புத் தன்மை தொடர்வதால், இது நமது நாள் முழுவதும் நமது ஆக்கத்திறனை சமரசம் செய்துவிடும். ஆகவே எழுந்ததும் மெதுவாக நடக்கவும். தசைப்பிடிப்புகள், தசை இறுக்கங்கள் இருந்தால், நெட்டிமுறிக்கவும். மூன்று அல்லது நான்கு மெதுவான நெட்டிகள் மற்றும் சில பெருமூச்சுகள் உதவியாக இருக்கும்.

ஒரு கப் தேனீருடன் நாளைத் தொடங்குதல் 

ஒரு சிறந்த வளர்ச்சிதை மாற்றத்திற்கான ரகசியம் காலையில் தேனீர் அல்லது காரத்தன்மையான பானத்துடன் அந்த நாளைத் தொடங்கக் கூடாது. உங்களது நாளை சர்க்கரை மற்றும் பால் சேர்ந்த டீ அல்லது காபி போன்ற அமிலத்தன்மையான பானங்களுடன் தொடங்க வேண்டாம். எலுமிச்சை சாறு மற்று தண்ணீர் குடிக்க வேண்டும். வைட் டீ அல்லது கிரீன் டீ குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

மொமைல் போன்களை செக் பண்ணுதல் 

 மொபைல் போன்களை செக் பண்ணுவது, ஈமெயில் செக் பண்ணுவது மற்றும் வேறு உத்திகளை ஒரு காலையில் எழுந்தவுடன் செய்யாதீர்கள். காலையில் எழுந்து முதல் இரண்டு மணிநேரத்திற்குள் உலகப்பிரச்சனைகள் எதையும் உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது ஆற்றலை முக்கியமற்ற வேலைகளில் செலுத்தாமல் மிக முக்கியமான வேலைகளில் செலுத்துங்கள்.

காலை உணவைத் தவிர்த்தல் 

காலை உணவைத் தவிர்ப்பதால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் ஆகியவை ஏற்படுகின்றன என சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. நீங்கள் காலையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் உங்களது உணவுத் தேர்வு தவறாகவே இருக்கும். நீங்கள் காலையில் ராஜா மாதிரி உணவு உட்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஏதாவது சாப்பிட வேண்டியது அவசியம்.

சிடுசிடுப்புடன் எழுந்திருத்தல் 

அதிகமானோருக்கு விடியற்காலை அமைதியற்றதும் பரபரப்புடையதுமாக இருக்கிறது. எனவே அப்படி இருப்பதை தவிர்க்க முயல வேண்டும். எப்போதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பழக வேண்டும்.

அன்றைய நாளை முன்னதாகவே திட்டமிடாமை 

உங்களது துணிகளை மற்றும் உணவுகளை ஒரு நாள் முன்னதாகவே திட்டமிடுகிறீர்களா? மக்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறு முன்னதாகவே திட்டமிடாமை. ஒரு நீண்ட நாளுக்கு பின்னர், அடுத்த நாள் காலைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம். ஆனால், உணவுகளைத் திட்டமிடுதல் மற்றும் துணிகளை எடுத்து வைத்தல் ஆகியவற்றை முன்னதாகவே செய்துவிடுங்கள். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னரே அடுத்த நாள் காலை உணவிற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வையுங்கள்.
Read more ...

எச்சரிக்கை! கோல்கேட் பற்பசையில் புற்றுநோய் காரணி

புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது.

பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது.

புற்று நோய்க் காரணி:

ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலமான தவறுகள்: ஆனால் இந்த அனுமதிக்குப் பின்னர் சில தவறுகள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்:

அதாவது கோல்கேட் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த அனுமதியை உணவு மற்றும் மருந்துக் கழகம் கொடுத்துள்ளது. இதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு வழக்கறிஞர் வெளிக் கொணர்ந்துள்ளார்.

ஆட்சேபனை தெரிவிப்பு:

உண்மையில் கோல்கேட் நிறுவனம் கடந்த 1997 இல் இந்த வேதிப் பொருளை பயன்படுத்த அனுமதி கோரியபோது உணவு மற்றும் மருந்துக் கழகத்தில் இடம் பெற்றுள்ள பலரும் இது ஆபத்தானது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் கோல்கேட் தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலோ, அதிக அளவில் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தினால்தான் ஆபத்து என்று வாதிடப்பட்டிருக்கிறது.

அபாயகரமான வேதிப்பொருள்:

இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலுலும் டிரைக்ளோசன் அபயாகரமான ஒரு வேதிப் பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்:

பற்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தவே டிரைக்ளோசன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய வேதிப் பொருட்களில் ஒன்று என்று 2010 இல் நடந்த ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Show Thumbnail

மலட்டுத்தன்மை:

மேலும் இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் 2013 இல் நடந்த ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

விளக்கம் அளிக்கும் கோல்கேட்:

ஆனால் இதுதொடர்பாக நடந்த சோதனைகள் அனைத்தும் விலங்குகள் மீது நடத்தப்பட்டவையாகும். ஆனால் நாங்கள் மனிதர்களிடம் சோதனை நடத்திய பிறகே இந்த வேதிப் பொருளை பயன்படுத்த முடிவு செய்தோம் என்று கோல்கேட் விளக்கம் அளிக்கிறது.

நிறுத்த இயலாது:

மேலும் இந்த வேதிப் பொருளை நிறுத்துவது குறித்து எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை என்றும் கோல்கேட் கூறியுள்ளது.

ஐரோப்பா தடை:

கடந்த 2010 ஆம் ஆண்டு உணவுப் பொருளில் டிரைக்ளோசனை சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது என்பது நினைவிருக்கலாம்.
Read more ...

குழப்பங்களையும் பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும் 10 இரகசியங்கள்

வெளியில் கசிய விட்டால் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும் 10 இரகசியங்கள்
இரகசியம் என்றாலே அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் ஆவல் இருக்கத் தானே செய்யும்? இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பல இரகசியங்கள் இரகசியங்களாகவே உள்ளது; பலருக்கு அதை பற்றி கடைசி வரை தெரிவதே இல்லை. சில இரகசியங்கள் சொல்லப்பட்டாலும் அதில் பிரயோஜனம் எதுவும் இருப்பதில்லை. மாறாக, ஏதோ ஜென்மம் எடுத்ததே அந்த இரகசியத்தை அறிந்து கொள்வதற்காக தான் என்பதை போல சில இரகசியங்களை தோண்டி பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் ஏற்படும்.
அப்படிப்பட்ட நேரத்தில், இரகசியங்களின் முக்கியத்துவத்தை லேசாக எடுத்து கொள்ள முடியாது. உலகத்தில் அப்படி முக்கியமாக கருதப்பட்ட இரகசியங்களைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். உலகத்தில் உள்ள மிகப்பெரிய இரகசியங்களில் இவைகளும் அடங்கியிருப்பதை எண்ணும் போது உங்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். எந்த இரகசியங்கள் உலகத்தில் மிகப்பெரிய இரகசியங்கள் என்ற கேள்வி மனிதனுக்கு எழுவது அவனின் இயல்பான பண்பே. சில இரகசியங்கள் உலகத்தில் மிகப்பெரிய இரகசியங்கள் என்பதால் அவைகள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சில இரகசியங்கள் உலகத்தின் மிகப்பெரிய இரகசியமாக கருதப்படுவதால், அவைகளை வெளியில் கசிய விட்டால் அவை பல குழப்பங்களையும் பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.
அப்படி உலகத்தில் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்ட சில விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

பிறரின் மீது நமக்கு ஏற்படும் ஈர்ப்புகள் 

 நமக்கு ஒரு வயதாகி எப்போது எதிர் பாலினத்தை உணர முடிகிறதோ அப்போதிலிருந்தே யார் மீதாவது ஒரு ஈர்ப்பு வந்திருக்கும். உண்மை தானே? நாம் வளர வளர அந்த ஈர்ப்பும் பலர் மீது வளர்ந்து கொண்டே போகும். இதில் முக்கியமானது என்னவென்றால் நமக்கு பலரின் மீது இருந்து ஈர்ப்பை நாம் வெளியில் சொல்வது கிடையாது. உலகத்தில் மிகவும் கவனமாக காக்கப்படும் இரகசியங்களில் இது ஒன்றாகும்.

இறந்த கால உறவுகள் 

ஆரோக்கியமான உறவிற்குள் நுழைவதற்கு முன் பலருக்கும் இறந்த கால உறவுகள் இருந்திருக்க கூடும். ஆனால் அதனை அனைவரும் வெளிப்படுத்துவதில்லை.

எண்ணெய் தளங்கள் 

உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கு, முக்கியமாக அரபு நாடுகளுக்கு வருவாயின் முக்கிய மூலமாக விளங்குவது எண்ணெயே. உலகத்தில் மிகவும் வலுவுள்ள கூட்டமைப்புகளில் ஒன்றான OPEC, எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தி வருகிறது. அதனால் வளமுள்ள எண்ணெய் தளங்களைப் பற்றி இரகசியம் காக்கப்படுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தானே.

கார்பரேட் உலகத்தின் வணிக இரகசியங்கள் 

 பல நிறுவனங்கள் ஒரே வகையான பொருளை விற்று வரும் விஷயத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஏன் அவைகளில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் பிறரை காட்டிலும் மிகவும் சிறப்பாக செயலாற்றுகிறார்கள்? ஆம், அதற்கு காரணம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்றான வணிக இரகசியங்கள்.

வங்கி கணக்குகள் 

உலகத்தை சுற்றியுள்ள பல நாடுகளும் இரகசியமான வங்கி வணிகத்திற்கு எதிராக குரலெழுப்பி, அதற்கு எதிரான தீர்மானத்தையும் எடுத்துள்ளனர். உலகத்தில் உள்ள மிகப்பெரிய இரகசியங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது வங்கி கணக்குகள் இரகசியம். பணத்தின் சுற்றோட்டம் எந்தளவிற்கு உள்ளதோ அதை பொறுத்து தான் பணத்தின் மதிப்பு அமையும். அதனால் எவ்வளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாது. Show Thumbnail

மருத்துவ வரலாறுகள் 

உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய இரகசியங்களில் இதுவும் ஒன்றாகும். பிற தகவல்களை போல் மருத்துவ வரலாறுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தால், நோயாளிகளுக்கும் அவர்களின் அடையாளத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

நீதித்துறை செயற்பாடு 

ஆம், இது பட்டியல் முதல் இடத்தில் இருக்க வேண்டியவை. வழங்கப்படும் அனைத்து தீர்ப்புகளும் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை. பல விஷயங்கள் மறைக்கப்பட்டு பொது மக்களுக்கு தெரியாத வண்ணம் தான் இருக்கும். அதே போல் அனைத்து நீதிபதிகளும் நீதி தேவதையின் பிள்ளையாக இருப்பார் என எதிர்ப்பார்க்க முடியாது. பலரும் அப்படி தான் என்றாலும் கூட, சிலரால் முரண்பாடுகள் ஏற்படலாம்.

ராணுவம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி 

இரகசியங்கள் உலகத்திலேயே ராணுவ இரகசியங்கள் தான் மிகப்பெரிய இரகசியமாகும். ஒரு நாட்டின் வணிகமும் நிதியும் செழிப்பாக இருக்க முக்கிய அம்சமாக ராணுவத்தை தான் பல நாடுகளும் கருதுகிறது. அமெரிக்க மற்றும் ரஷ்யா போன்ற சில நாடுகள் ராணுவ தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி இருப்பதாக பெரியளவில் நம்பப்பட்டாலும், அது எந்தளவிற்கு நழுவித் தப்பித்துக் கொள்கிற இரகசியமாக உள்ளது என்பது கேள்விக் குறியே. ஏன் அந்தத்த நாட்டு குடிமக்களிடம் கூட இதற்கு பதில் கிடையாது. இது ராணுவத்தில் மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் பொருந்தும்.
Read more ...

அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதா?

அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதா?
நம்ம ஊர் வெப்பநிலைக்கு சாதாரணமாகவே கன்னா பின்னாவென்று வியர்த்து வழியும். வீட்டில் சும்மா இருந்தால் கூட உடம்பே அவிந்து விடுவது போல இருக்கும். 
உச்சி வெயிலில் பைக்கில் போகும் போது டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டாலும் இதே நிலைமை தான். அதிலும், தலையில் ஹெல்மெட் மாட்டியிருந்தால் கேட்கவே வேண்டாம். தலை முழுவதும் வியர்வையில் நனைந்து, எரிச்சல் தான் மிஞ்சும். 
இந்தப் பிரச்சனைகளால் அடிக்கடி குளிக்க வேண்டுமென்று தான் தோன்றும். ஆனால் குளிக்கிற நோக்கில் அடிக்கடி தலைமுடியைக் நீரில் அலசுவது நல்லதா, எப்படியெல்லாம் தலைமுடியைப் பராமரிக்கலாம் என்பது குறித்து வல்லுனர்கள் கூறும் விளக்கத்தை இப்போது நாம் பார்க்கலாம்.

தினமும் அலசுதல் 

ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற வியர்வைப் பிரச்சனைகள் இருந்தால் ஒழிய, தலைமுடியை நாம் தினமும் அலச வேண்டுமென்ற அவசியமில்லை. ஷாம்புக்களில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை தலைமுடிகளிலும் மயிர்க் கால்களிலும் உள்ள தேவையான எண்ணெய்களை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்துவிடும். இது நல்லதல்ல. எனவே வாரத்திற்கு 3 முறை தலைமுடியைக் கழுவினால் போதும். அதிலும் சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது.
 

பொடுகுகளை நீக்குதல் 

 இப்போதெல்லாம் பொடுகுப் பிரச்சனை என்பது ஒரு பொதுவானது தான். எண்ணெய்த் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்குப் பின் சூடான டவல் கொண்டு சுற்றிக் கொண்டு, பின்னர் முடியைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், இஞ்சிச் சாற்றை உச்சந்தலையில் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முடியைக் அலசுவதும் நல்லது. மேலும் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு தேய்த்து 2 நாட்களுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவுதல் நலம்.

ஹென்னா தேய்த்தல் 

தலைமுடிக்கு ஹென்னாவை உபயோகிப்பதால், அது வறண்டு தான் போகும். அதனால் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று தான் பெரும்பாலான தலைமுடி நிபுணர்கள் சொல்வார்கள். அதற்குப் பதில் தரமான கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

ஹேர் சீரம்கள் 

தலைமுடிகளை மிருதுவாக்க ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. ஓரிரண்டு துளிகளை மட்டுமே எடுத்து முடிகளில் சீராகத் தடவினாலே போதும்.

ஆரோக்கியமான கேசத்திற்கு...

 நுனியில் பாதிப்படைந்துள்ள முடிகளை ட்ரிம் செய்து விடுங்கள்.
சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்க தொப்பி, ஸ்கார்ஃப் ஆகியவற்றை அணியலாம்.
 காலை 11 முதல் மாலை 4 மணி வரை வெயிலில் சுற்ற வேண்டியிருந்தால், ஹேர் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள்.
நீச்சலடிக்கப் போகும் முன், எப்போதும் கொஞ்சம் கண்டிஷனரைத் தேய்த்துக் கொள்ளுங்கள்.

ஹேர் ஸ்பா 

ஹேர் ஸ்பா செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், இயற்கை வழிகளையே நாடுங்கள். செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து முடிகளில் தடவுவது நல்லது. அது முடியை நன்கு கருமையாகவும், வலுவாகவும் வளரச் செய்யும். மேலும் இரும்புச்சத்து அதிகமுள்ள மருதாணி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பு ஆகியவையும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே போல் முடி அலர்ஜிக்கு கற்றாழை மிகவும் நல்லது. முடிகளில் கலர் செய்திருப்பவர்கள், வெண்ணெயை உபயோகிக்கலாம்.
Read more ...