சூர்யா ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை சந்தித்தபோது
எடுத்த போட்டோவில் சிங்கம் பட வசனத்தை போட்டு அதை ஃபேஸ்புக்கில்
பிரபலமாக்கியுள்ளனர் ரசிகர்கள்.
ஐ பட இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்
ஸ்வார்ஸ்நெக்கரை ஹோட்டல் லீலா பேலஸில் உள்ள ஜிம்மில் சந்தித்து பேசினார்
சூர்யா. சந்தித்து பேசியதோடு மட்டும் அல்லாமல் அர்னால்ட் எழுதிய
உடற்பயிற்சி குறித்த புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆட்டோகிராப் வாங்கினார்
சூர்யா.
இது தான் எங்களுக்கு எல்லாமே தெரியுமே இதையே ஏன் மறுபடியும்
கூறுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூர்யா, அர்னால்ட் சந்தித்தபோது
எடுத்த புகைப்படத்தில் சூர்யாவின் சிங்கம் படத்தில் வரும் வசனத்தை
இணைத்துள்ளனர் குறும்புக்கார ரசிகர்கள்.
அதாவது அர்னால்ட் சூர்யாவை பார்த்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா
என்று கேட்கிறாராம். அதற்கு சூர்யா, அய்யோ அது சத்தியமா நான் இல்லீங்கண்ணா
என்று பவ்யமாக கூறுகிறாராம்.
இந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

No comments:
Post a Comment