Recent Post

உலகின் வெகு சுத்தமான கிராமம்

உலகின் வெகு சுத்தமான கிராமம்

சுற்றுலாத் தலங்கள் 

மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிரபுஞ்சி, தலைநகர் ஷில்லாங் தவிர ஜெயின்டியா மலைகள், மேற்கு மற்றும் கிழக்கு கரோ ஹில்ஸ் ஆகிய இடங்களும் எண்ணற்ற பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகின்றன.

சிரபுஞ்சி 

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

ஷில்லாங் \

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

ஈஸ்ட் காசி 

ஹில்ஸ் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் 7 மாவட்டங்களில் ஒன்றாகும். பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த மாவட்டத்தில் நிரம்பியுள்ளதால் இது மேகாலயா மாநிலத்தில் அதிகம் விஜயம் செய்யப்படும் சுற்றுலாப்பிரதேசமாக விளங்குகிறது.

நோஹஸ்நித்தியாங் அருவி 

செவன் சிஸ்டர்ஸ் அருவி என்று பிரபலமான அறியப்படும் நோஹஸ்நித்தியாங் அருவி, ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மௌஸ்மாய் கிராமத்துக்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஜெயின்டியா மலைகள் 

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை.

கிரேம் லியாத் 

ப்ராஹ் ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கி.மீ நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

மௌசின்ரம் ஈஸ்ட் 

காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மௌசின்ரம் கிராமம்தான் உலகிலேயே அதிகமாக மழை பெய்யக்கூடிய இடமாகும்.

நோகலிகை நீர்வீழ்ச்சி 

சிரபுஞ்சியில் அமைந்துள்ள நோகலிகை நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அருவி டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். எனவே மழைக்காலங்களில் இந்த அருவிக்கு சுற்றுலா வருவதே சிறப்பானதாகும்.

லைத்மவ்சியாங் 

மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லைத்மவ்சியாங் மலைப்பிரதேசம்.

கடுகு தோட்டம் 

தலைநகர் ஷில்லாங்கில் உள்ள கடுகு தோட்டம்.

பாராபனி ஏரி 

ஷில்லாங்கிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பாராபனி ஏரி. உமியம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு இந்த ஏரி. இதன் காரணமாக உமியம் ஏரி என்றும் இது அழைக்கப்படுகிறது.

அசைவச்செடி! 

கார்னிவோரஸ் எனப்படும் புலாலுண்ணும் செடி வகை. இந்தச் செடிவகைகள் மேகாலயாவின் காடுகளில் நிரம்ப காணப்படுகின்றன.

மவ்ளினோங் 

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்ளினோங் கிராமம். உலகின் வெகு சுத்தமான கிராமமாக இது அறியப்படுகிறது.

Read more ...

அடுத்த முதல்வராக யார்? செய்தி ஒளிபரப்பும் கன்னட சேனல்கள்

அடுத்த முதல்வராக யார்?  செய்தி ஒளிபரப்பும் கன்னட சேனல்கள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டதாக கன்னட சேனல்கள் செய்தி ஒளிபரப்பி வருகின்றன. ஜெயலலிதா கோர்ட்டுக்குள் காலை 11 மணிக்கு சென்றார். இந்நிலையில், சிறிது நேரத்திலேயே தீர்ப்பு வாசிக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் ஜெயலலிதா மீது சட்டப் பிரிவு 13 (1) இ படி குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாகவும் கன்னட சேனல்களில் செய்தி ஒளிபரப்பாகிறது.
கோர்ட் வட்டார தகவல்கள் தெரிவித்ததாக கன்னட டிவி சேனல்களில் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருமே தீர்ப்பு குறித்து தெரிவிக்காத நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கன்னட சேனல்களில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுதான் வேடிக்கையின் உச்சமாக உள்ளது. ஒருவேளை காவிரி உள்ளிட்ட விவகாரங்களினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற செய்திகள் கசியவிடப்படுகிறதா என்று தெரியவில்லை. வழக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, மதியம் 1 மணிக்கு தீர்ப்பு விவரம் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ...

இணையதளம் பயன்படுத்துவதில் சிக்கலா, அப்ப இதை தெரிந்து கொள்ளுங்கள்

இணையதளம் பயன்படுத்துவதில் சிக்கலா, அப்ப இதை தெரிந்து கொள்ளுங்கள்
இணைய உலகம் ரொம்ப பெரிது, அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு. ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தேவையான எதாவதொரு தகவலை பற்றி தெரிந்து கொள்ள இணையக்கை பயன்படுத்த ஆரம்பித்து இப்ப எல்லாவற்றிர்க்கும் இணையத்தை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இணையத்தை பற்றி உங்களுக்கு தெரியாத நீங்க நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான இன்டெர்நெட் டிப்ஸகளை ஸ்லைடரில் பாருங்க.

டேப் 

இணையத்தில் கூகுள் க்ரோமை பயன்படுத்தும் போது தெரியாத்தனமாக டேபை க்லோஸ் செய்துட்டீங்களா, கவலை வேண்டாம் Control+Shift+T அழுத்தினால் திரும்பவம் அந்த டேப் திறந்துவிடும்

மீடியா ஹின்ட் 

மீடியா ஹன்ட் மூலம் நீங்க எல்லா இணையத்தையும் பார்க்க முடியும்

தேடுதல் 

Control+F or Command+F இதை அழுத்தினால் குறிப்பிட்ட தகவல்களை குறிக்க முடியும்

தடயம் 

இணையத்தில் நீங்க பார்க்கும் தகவல்களின் பதிவை தடுக்க பயர்பாக்ஸ் முகவர்கள் control+shift+p, மற்றும் க்ரோம் முகவர்கள் control+shift+N கொடுத்தால் வேலை முடிந்தது

விளம்பரம் 

யூ ட்யூப் வீடியோ பார்க்கும் போது விளம்பரம் உங்களை கடுப்பேற்றுகிறதா, அப்படி என்றால் ஆட் ப்ளாக் ப்ளஸ் நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

டிபைன் 

உங்களுக்கு புரியாத வாரத்தைகளின் அர்த்தம் தேட அந்த வார்த்தைக்கு முன் டிபைன் என்று கொடுத்தால் அதற்கான அர்த்தம் கிடைக்கும்

யுஆர்எல் 

யுஆர்எல் பாரில் நீங்க டைப் செய்து அதன் பின் control + enter கொடுத்தால் தானாக www. & .com தெரியும்

தேடல் 

தேடுதலை குறிப்பிட வார்த்தைகளின் இடையில் - பயன்படுத்த வேண்டும்


டேப் 

மவுஸ் மூலம் டேபை பார்க்க கடுப்பாக உள்ளதா, control+tab கொடுத்து அந்த வேலையை சுலபமாக்குங்கள்

புத்தகம் 

சில தேடல்களில் Title filetype:PDF கொடுத்தால் அதற்கேற்ற புத்தகம் கிடைக்கும்
Read more ...

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?!

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?!
உலகின் மிகச் சிறந்த இளம் இயற்பியல், வானியல் நிபுணர்களில் ஒருவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் நடந்து வரும் ஹிக்ஸ் போஸான் என்ற அணுவின் நுண் துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!, 'கடவுள்' இருப்பது உண்மை தான்!! ஈடுபட்டுள்ள முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். பிபிசியுடன் இணைந்து இவர் உருவாக்கிய வானியல் தொடர்பான டாகுமெண்டரிகள் உலகப் புகழ் பெற்றவை. மிகக் கடினமான விண்வெளி ஆராய்ச்சிகளை மிக மிக எளிதாக மக்களுக்குப் புரிய வைப்பதில் கில்லாடி.

வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள்...

இவரது Wonders of Life, Wonders of the Universe, Wonders of the Solar System போன்ற டாகுமெண்டரிகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல்கள் ஒளிபரப்புவது வழக்கம். முடிந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் இந்த சிடிக்களை ஆன்லைனில் வாங்கியாவது பாருங்கள். இவை வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள் என்பதே நிஜம்.
பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்...

பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்... 

 இந்த பிரையன் காக்ஸ் இப்போது ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் சொல்வது இது தான். பூமியையும் மனித குலத்தையும் எந்த நேரத்திலும் மொத்தமாக காலி செய்யப் போவது ஒரு விண் கல் தான் என்கிறார். சமீபத்தில் பூமியை ஒரு பெரிய விண் கல் மிகச் சமீபத்தில் கடந்து சென்றுள்ளது. இந்தக் கல் பூமியின் மீது மோதியிருந்தால் இப்போது இதை எழுத நானோ, படிக்க நீங்களோ இருந்திருக்க சாத்தியமில்லை. பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்.

மனித குலம் செய்த மாபெரும் தவறு... 

 இதே போன்ற விண் கல் எந்த நேரத்திலும் பூமியைத் தாக்கலாம் என்று கூறும் காக்ஸ், இந்த ஆபத்துகளை எதிர்கொள்வது, தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மிக மந்தமான வேகத்தில் நடந்து வருவது ஆச்சரியம் தருவதாகவும், இந்த ஆபத்தை உலக நாடுகள் சரியான உணரவில்லை என்றும் எச்சரித்துள்ளார். இதைப் பற்றி கவலைப்படாவிட்டால் மனித குலம் செய்த மாபெரும் தவறாக அது விளங்கும் என்கிறார்.

பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால்... 

அவர் கூறுகையில், சில மாதங்களுக்கு முன் ஒரு விண்கல் பூமிக்கு மிக அருகே வந்துவிட்டுப் போனது. அது வந்ததே நமக்குத் தெரியாது. அது திரும்பிச் சென்றபோது தான் அதை நாம் கவனித்தோம். அந்தக் கல் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்திருந்தால் பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். நாம் மீண்டும் தப்பியிருக்கிறோம்.

பக்கத்தில் வந்து போன 2014 EC விண்கல்... 

ஒரு பெரிய பேருந்தின் சைஸில் உள்ள 2014 EC என்ற விண்கல் கடந்த மார்ச் மாதம் பூமிக்கு 61,637 கி.மீ. தூரமாக, பூமிக்கு மிகப் பக்கமாக வந்து சென்றது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் 6ல் ஒரு பகுதி தான். இந்தக் கல் பாதை மாறி இன்னும் நெருங்கி வந்திருந்தால் பூமி இந்நேரம் பஸ்பமாகியிருக்கும். மனித இனத்தின் பெயரை தாங்கிக் கொண்டு நிச்சயம் ஒரு விண் கல் விண்ணில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. அது எப்போது பூமியைத் தாக்கும் என்பது நமக்குத் தெரியாது.

நமக்கு குருட்டு அதிர்ஷ்டம்... 

பூமிக்கு மிக ஆபத்தானவை என்று கிட்டத்தட்ட 1,400 விண் கற்களை நாஸா அடையாளம் கண்டு, அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், இன்னும் எத்தனை கற்களோ.. யாருக்குத் தெரியும். இது வரை நாம் தப்பிப் பிழைத்திருப்பது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகத்தான். எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, நம்மிடம் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்தே இந்த ஆபத்துகளை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும் என்று தெரிந்திருந்தும் இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

ரஷ்யாவில் விழுந்த மாபெரும் விண்கல்.... 

 விண் கற்களை அணு ஆயுதங்களைக் கொண்டு தகர்க்கலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சாத்தியமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடங்கக் கூட இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் ஒரு மாபெரும் விண்கல் வந்து விழுந்து வெடித்தது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப் போல 20, 30 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம்.... 

அந்தக் கல் பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது கூட நமக்குத் தெரியாது. அது பூமிக்குள் வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம். ஆனால், நிலைமையே புரியாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகின்றன என்கிறார் காக்ஸ்.

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?: 

இதற்கிடையே நாஸா மிகக் கவலையுடன் கண்காணித்து வரும் விண் கல் 1950 DA தான். கிட்டத்தட்ட 1 கி.மீ. விட்டம் கொண்ட இந்த விண்கல் 1950ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்ல் ஏ. விர்டனென் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. 17 நாட்கள் மட்டுமே அப்போது இதை கண்காணிக்க முடிந்தது. பின்னர் இது மறைந்துபோனது. ஆனால், 2000ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இது விண்வெளி தொலைநோக்கிகளுக்குப் புலப்பட்டது.

இதுவரை இது உடையவில்லை.... 

 2001ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இந்தக் கல் பூமிக்கு 7,789,950 கி.மீ. அருகே வந்துவிட்டுப் போனது. அப்போது இதை ஆராய்ந்தபோது இந்தக் கல் மிக வேகமாக சுழல்வதும், இரும்பு, நிக்கல் போன்ற ரசாயனங்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது. இந்த அதிவேகமாக சுழற்சி காரணமாக இந்தக் கல் தானாகவே உடைந்து சிதறியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை இது உடையவில்லை.

பயண திசை மாறுகிறது?... 

வினாடிக்கு 15 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் இந்த எரிகல் பூமியில் 2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அட்லாண்டிக் கடலுக்குள் மணிக்கு 60,000 கி.மீ. வேகத்தில் வந்து விழ வாய்ப்புண்டு. இது நடந்தால் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு பூமி வெறும் திட சாம்பலாகவே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அடுத்தடுத்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் பூமியை நோக்கிய இந்தக் கல்லின் பயண திசை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை உறுதி செய்கின்றன. இது தான் இப்போதைக்கு நமக்கு உள்ள ஒரே ஆறுதல்!
Read more ...

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா?: ஃபேஸ்புக்கை கலக்கும் அர்னால்ட், சூர்யா

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா?: ஃபேஸ்புக்கை கலக்கும் அர்னால்ட், சூர்யா
சூர்யா ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை சந்தித்தபோது எடுத்த போட்டோவில் சிங்கம் பட வசனத்தை போட்டு அதை ஃபேஸ்புக்கில் பிரபலமாக்கியுள்ளனர் ரசிகர்கள். 
ஐ பட இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை ஹோட்டல் லீலா பேலஸில் உள்ள ஜிம்மில் சந்தித்து பேசினார் சூர்யா. சந்தித்து பேசியதோடு மட்டும் அல்லாமல் அர்னால்ட் எழுதிய உடற்பயிற்சி குறித்த புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆட்டோகிராப் வாங்கினார் சூர்யா.
இது தான் எங்களுக்கு எல்லாமே தெரியுமே இதையே ஏன் மறுபடியும் கூறுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூர்யா, அர்னால்ட் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தில் சூர்யாவின் சிங்கம் படத்தில் வரும் வசனத்தை இணைத்துள்ளனர் குறும்புக்கார ரசிகர்கள். 
அதாவது அர்னால்ட் சூர்யாவை பார்த்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா என்று கேட்கிறாராம். அதற்கு சூர்யா, அய்யோ அது சத்தியமா நான் இல்லீங்கண்ணா என்று பவ்யமாக கூறுகிறாராம். இந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.
Read more ...

ஹாரிஸ் போட்ட தாலாட்டு... பரவசத்துடன் பாடி நடித்த தல 55

ஹாரிஸ் போட்ட தாலாட்டு... பரவசத்துடன் பாடி நடித்த தல 55
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பெயர் சூட்டப்படாத தல 55 படத்துக்காக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருவாக்கிய தாலாட்டுப் பாடல் மிகவும் பிடித்துப் போனதால் அதைப் பாடி நடித்தாராம் அஜீத்.  கவுதம்மேனன், இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கின்றனர். ஏற்கனவே ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது

ஹாரிஸ் 

 தற்போது படக் குழுவினர் சிக்கிம் சென்றுள்ளனர். இந்த படத்துக்காக இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மூன்று பாடல்களைக் கொடுத்துவிட்டார். இதனை அவரே தெரிவித்து உள்ளார்.

பாராட்டு 

இந்த பாடல்கள் அஜீத்துக்கு மிகவும் பிடித்து போனதாம். ஹாரீஸ் ஜெயராஜை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மூன்று பாடல்களில் ஒன்று தாலாட்டு பாடலாகும். தாலாட்டு... என்று தொடங்கும் இந்த பாடலை அஜீத் தனது மகளாக நடிக்கும் அனிகாவுடன் பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம். அஜீத் மிகவும் பரவசமாக இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாராம்.

சிக்கிம் 

சிக்கிம், ஜோத்பூர், சண்டிகார், டெல்லி போன்ற இடங்களில் இந்த பாடல் காட்சியைப் படமாக்குகின்றனர். இந்த மூன்று பாடல்கள் தவிர மேலும் இரண்டு பாடல்களை இந்த படத்துக்காக கம்போஸ் செய்து வருவதாக ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

என்ன தலைப்பு 

இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தலைப்பு முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்தார்.
Read more ...